BREAKING NEWS

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் நிர்வாக பொறுப்பை மாற்றிய இந்து சமய அறநிலையத்துறை.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் இரு சமூகத்தினருக்கு சொந்தமானதாகும்.

இந்த கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்களில் உள்ள கடைகள் மூலமாக கோவிலுக்கு வருவாய் வந்துள்ளது.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் கடை வாடகை உள்ளிட்ட கணக்குகளை முறையாக பராமரிக்காமலும்,புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க விடாமல் நிர்வாக பொறுப்புகளை தங்களுக்குள் ஏற்றுக்கொண்டு ஆதாயம் பெறுவதாக ஒரு சமூகத்தினர் குற்றச்சாட்டுகள் எழுப்பினர்.

மேலும், இந்த முறைகேடுகள் குறித்து சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்..

இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் உத்தரவின்படி,

ஓமலூர் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு முறையாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிகமாக காருவள்ளி சின்ன திருப்பதி ஶ்ரீ பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலின் செயல் அலுவலரை தக்காராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,திருக்கோயிலின் நிர்வாக பொறுப்புகளை கடந்த மாதம் 25 ஆம் தேதி மற்றும் இம்மாதம் 5 ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் ஒப்படைக்க கோரி முன்னாள் நிர்வாகிகளுக்கு பதிவு அஞ்சல் மூலம் செயல் அலுவலரால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், செயல் அலுவலர் குறிப்பிட்டு இருந்த இரு தினங்களில் திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்புகளை ஒப்படைக்க முன்னாள் நிர்வாகிகள் முன் வரவில்லை என தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து திருக்கோயிலின் தக்கராக சின்னதிருப்பதி செயல்அலுவலர் தன்னிச்சையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

CATEGORIES
TAGS