BREAKING NEWS

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 120 தெருக்களுக்கும் வார்டு மற்றும் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைத்து தர குத்தாலம் பேரூராட்சி மன்றத்தில் டிசம்பர் மாத கூட்டத்தில் தீர்மான எண்.164 நாள் 30.12.2022-ன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ் அமைத்து தர பேரூராட்சி நிர்வாகத்தால் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்த கோரிக்கையை ஏற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்.)  திட்டத்தின் கீழ் ரூ. 9.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து,குத்தாலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தெரு விபர பலகைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

இதன் தொடக்க விழா நிகழ்ச்சி குத்தாலம் பேரூராட்சி ஏழாவது வார்டு உத்திர வடக்கு வீதியிலும்,மூன்றாவது வார்டு மேலச் செட்டித் தெரு,எடத் தெருவிலும் நடைபெற்றது.இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு தெருக்களுக்கான விபர பலகையை திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம்.க.அன்பழகன், குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் ஏ.ரஞ்சித், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனுராக், ஓ.என்.ஜி.சி.திட்ட நிதி சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் ந.சிவங்கர், ஓ.என்.ஜி.சி உற்பத்தி பிரிவு மேலாளர்கள் சம்பத்குமார், வில்சன், குணசேகரன், பேட்டா நாயக், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி இளைநிலை உதவியாளர் க.சுந்தர், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

 

CATEGORIES
TAGS