கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை,
கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை நிவாரண வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2018 நவம்பர் 16ஆம் தேதி வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது மீனவர்களைப் போல் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்களை இழந்த விவசாயிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

கஜா புயல் வீசிய நான்காவது ஆண்டு நினைவான இன்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் தென்னம்பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தங்கள் வேதனைகளை தெரிவித்தனர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும் ஒரு மரத்திற்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது.
அதுவும் விழுந்த அனைத்து மரத்திற்கும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டும் தென்னை விவசாயிகள் புதிய தென்ன பிள்ளைகளை நடவு செய்து நான்காண்டுகள் ஆகிறது இன்னும் மூன்று ஆடுகளுக்கு பிறகு தான் காய்க்க தொடங்கும் அதுவரை வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு வரும் மூன்று ஆண்டுகளுக்காழது பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிவாரண உதவிகள் வழங்கி கை தூக்கி விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
