BREAKING NEWS

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.

கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும்:, மீனவர்களின் கோரிக்கை.

தஞ்சை பேரழிவை ஏற்படுத்திய கஜா புயலில் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நொறுங்கிய மல்லிப்பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என்ற மீனவர்களின் கோரிக்கை நான்காவது ஆண்டாக நீடிக்கிறது காலதாமதம் ஏற்பட்டால் இனி வரும் புயல்களில் எஞ்சிய படகுகளையும் இழக்க நேரிடும் என தஞ்சை மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

 

கடந்த 2018 நவம்பர் 16-ஆம் தேதி வீசிய கஜா புயல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் மீனவர்கள் நிறுத்தி வைத்திருந்த 250 விசை படகுகள் துறைமுக சுவரில் மோதி சுக்கு நூறாக நொறுங்கியது.

 

 

இதனால் தஞ்சை மீனவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர் அரசு வழங்கிய நிவாரணத்தைக் கொண்டு சுமார் 150 விசைப்படகுகள் மட்டுமே மீண்டும் தொழிலுக்கு தயாரானது . நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் குறைந்த நிலையில் பாதி மீனவர்கள் வேலை இழந்தனர் இந்நிலையில் மல்லி பட்டினத்தில் தூண்டில் வளைவு அமைத்து தர மீனவர்கள் கோரிக்கை வைத்து இதுவரை நிறைவேற்றப்படவில்லை,..

 

 

கஜா புயல் கடந்து இன்று நான்கு ஆண்டுகள் கடந்து விட்டது தமிழக அரசு ஆய்வு பணிக்கு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி உள்ளது உடனடியாக தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஆய்வை மத்திய மாநில அரசுகள் நடத்தி தஞ்சை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தங்கள் கோரிக்கை தொடர்ந்து காலதாமதம் ஆனால் வரும் புயல்களில் எஞ்சிய விசை படகுகளையும் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )