BREAKING NEWS

கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி சிறப்புரையாற்றினர்.

 

 

அதைத்தொடர்ந்து பள்ளியின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கான விறகு அடுப்பில் மண்பானை வைத்து பொங்கல் பொங்கும் போட்டியை விறகடுப்பில் கற்பூரம் ஏற்றி துவக்கி வைத்து மற்ற விளையாட்டு போட்டிகளை பார்வையிட்டனர். பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பத்தடி உயர மண்பானை வைத்து அதில் பொங்கல் பொங்குவது போல் செய்யப்பட்டிருந்த அலங்காரம், கூரை வீடு ஒன்று கட்டப்பட்டு மாடுகள் கரும்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

 

தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரியத்தை வளர்க்கும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. சில்லி கோடு தாண்டுதல், பலூன்களை ஊதி உடைத்தல், மெதுவாக சைக்கிளில் செல்லுதல், தவளை ஓட்டம், வளையம் வீசுதல், மண்பானையில் ஓவியம் வரைதல், ரங்கோலி ஓவியப்போட்டி, கரும்பு தின்னும் போட்டி, பலூன் ஊதும் போட்டி ஆகியவை நடைபெற்றது. மாணவ மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர். இதில் ஏராளமான மருத்துவர்கள் விறகு அடுப்பில், மண் பானையில் ஏராளமான மருத்துவர்கள் பொங்கல் வைத்து பொங்கும் போட்டியில் பங்கேற்றனர்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், ஞான-இமயநாதன், இளையபெருமாள், பள்ளி தாளாளர் சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS