BREAKING NEWS

கஞ்சா வைத்து இருந்த நபரை கைது செய்த கூடங்குளம் காவல்துறை.

கஞ்சா வைத்து இருந்த நபரை கைது செய்த கூடங்குளம் காவல்துறை.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் L&T Main Plant -ல் உள்ள தினேஷ் இன்ஜினியரிங்ல் சுராஜ் ஹோல்தர் கடந்த இரண்டு மாதமாகவும், ஆகாஷ் மண்டல் கடந்த 3 மாதமாகவும், வேலை பார்த்து வந்துள்ளார்கள்.

 

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுராஜ் ஹோல்தர் தனது சொந்த ஊரான சத்தீஸ்கர் சென்று விட்டு ஆகாஷ் மண்டலுடன் இன்று காலை கூடன்குளம் அணுமின் நிலையம் மெயின் பிளான்ட் லேபர் காலனி மெயின் கேட்டு அருகில் வரும்போது அங்கு செக்யூரிட்டியாக பணிபுரிந்த கூடன்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த நாராயண நாடார் மகன் மகாராஜா வயது 55 என்பவர் சுராஜ் ஹோல்தர் என்பவரை பரிசோதித்த போது அவரது பேக்கில் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

 

மேற்படி சம்பவம் குறித்து கூடன்குளம் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ க்கு தகவல் கொடுக்கப்பட்டது அதன் பேரில் உடனடியாக காவல் உதவி ஆய்வாளர் வினுகுமார் க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடம் சென்று சுராஜ் ஹால்தர் மற்றும் ஆகாஷ் மண்டல் என்ற இருவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.

 

அதில் அந்த நபர் அன்று தான் கூடங்குளம் வந்தது தெரியவந்தது அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள் கூடங்குளம் காவல் உதவி ஆய்வாளர் வினுகுமார் கூறுகையில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் விற்பனை செய்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறை க்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )