கடத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பாக நவம்பர் 23, 24 தேதிகளில் சிறு விடுப்பு போராட்டம்.
தர்மபுரி மாவட்டம்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் முடிவிற்கிணங்க பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24.11.2022 மற்றும் 25.11.2022 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊழியர்களும் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என,
தீர்மானிக்கப்பட்டதின் அடிப்படையில் இன்று கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் வட்டச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பிரச்சார உரை வழங்கினார்.
1. முன்னாள் மாநில தலைவரின் பணி ஓய்வு காலத்தில் காண பண பலன்கள் வழங்க கோரல்
2. காலி பணியிடங்களை நிரப்ப கோரல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு குறிப்பு போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
CATEGORIES தர்மபுரி
TAGS ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்கடத்தூர் ஒன்றிய அலுவலகம்தமிழ்நாடுதர்மபுரி மாவட்டம்தலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்