கடத்தூர் கிளை நூலகத்தில் கவியரங்கம்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வந்த நூலக வார விழாவில் நிறைவு நாளானே நே ற்று ஞாயிற்றுக்கிழமை கவியரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
புலவர் சிவலிங்கம், மகாலிங்கம், சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், கலைமகள் கல்வி நிறுவனங்கள் நிறுவனர் . நடராஜன், ஆசிரியர் பழனி சிறப்புரையாற்றினர். “அறிவின் திறவுகோல் நூலகமே?” என்னும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு பாவலர் மலர்வண்ணன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் இளங்கோ கவியரங்கத்தைத் தொடங்கி வைத்தார். கவிஞர்கள் ரவிச்சந்திரன், சம்பத், நிகில்குமார், மதனகோபாலன், புனிதவள்ளி, குறள்மொழி, ரங்கநாயகி கண்ணன், சண்முகப்பிரியா, மாலதி அனந்த பத்மநாபன் ஆகியோர் கவி பாடினர். முன்னதாக நூலகர் சிசரவணன் வரவேற்றார். முடிவில் புலவர் நெடுமிடல் நன்றி கூறினார்.