கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் சங்கம் சார்பில் முதலாம் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் 224 வது ஆண்டு குருபூஜை விழா பழனி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை, சர்மா, கார்த்தி, கோபிநாத், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முருகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செயன் , அகம் அறக்கட்டளை இமயவர்மன், காஞ்சிபுரம் திலீபன் புகழ் என்கிற செந்தில்நாதன், ஆரணி பிரபு ஆகியோர் பங்கேற்று மருது பாண்டியர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரையாற்றினார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் கடலாடி அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் குருபூஜை விழாவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி , கட்டுரைப் போட்டி , ஓவியப்போட்டி , பரதநாட்டியம் , நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் பரிசு மற்றும் கேடயம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களையும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் கடலாடி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சீலப்பந்தல் அசோக், சாலையனூர் விஜய், திருவண்ணாமலை சுப்பு, வெங்கடேசன் உள்ளிட்ட கடலாடி அகமுடையார் சங்க நிர்வாகிகளும் பொதுமக்களும் விழா குழுவினரும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக செந்தில் நன்றி உரையாற்றினார.
