BREAKING NEWS

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.

 

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.

 

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி தேர்தல் நேரத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் நிறுத்தப்பட்டு வைத்திருந்த பேருந்து சேவையை மீண்டும் துவங்கும் வகையில் முதற்கட்டமாக,

 

 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் அகரம் கிராமத்திலிருந்து நிதிநத்தம், குமாரை, புதுக்குளம், சிறுமுளை, பெருமுளை, திட்டக்குடி, தொழுதூர் வழியாக பழனிக்கு நேரடி பேருந்து போக்குவரத்து வசதியை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சிவி கணேசன் அவர்கள் பேருந்தை சிறிது தூரம் ஓட்டி பயண சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

 

 

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் வைரம் பாண்டியன், ஒன்றிய பொறியாளர் ராஜேந்திரன், டெக்னீசியன் சங்கர், ஊராட்சி செயலாளர் கொளஞ்சிநாதன், கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல், திமுக கிளைச் செயலாளர் சீனிவாசன், இளைஞர் அணி நிர்வாகி பிரபு, கிளை நிர்வாகிகள் பெரியசாமி மாயவேல் வெங்கடேசன் பரமசிவம் இளவரசி ஜோதி கோகிலாதேவி சரவணன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

 

 

அதனைத் தொடர்ந்து நிதிநத்தம், குமாரை, புதுக்குளம், சிறுமுளை, பெருமுளை வழியாக திட்டக்குடி சென்ற அமைச்சர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள், பின்னர் வழிநெடுக திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்து அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் பின்னர் அவர்களோடு இணைந்து பேருந்து சேவையை துவக்கி வைத்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

 

திட்டக்குடி பேருந்து நிலையத்திலிருந்து தொழுதூர், வைத்தியநாதபுரம், கீழக்கல் பூண்டி, ஒரங்கூர், வள்ளிமதுரம், சித்தேரி, பணியாந்தூர் உள்ளிட்ட 11 கிராமங்கள் வழியாக 13 கிலோமீட்டர் கிராமப்புறங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

இந்நிகழ்வில் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொமுச நிர்வாகிகள், திட்டக்குடி நகராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், நகர்மன்ற துணைத் தலைவர் பரமகுரு,மாவட்ட கவுன்சிலர் ராஜரத்தினம், நல்லூர் ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் சுகுணா சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிலிப் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )