கடலூரில் பெண்ணிடம் தங்க சங்கிலியைப் பறித்தவனிடம் பறிமுதல் செய்த பணத்தை கையாடல் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த அம்மணியம்மாள் என்பவர் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம், கீழபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், டூவீலரில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து 3 பவுன்தங்கசங்கிலியைப் பறித்துவீட்டு ஓடினாராம்.
இதில் கைது செய்யப்பட்ட பிரபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ. 75000 பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் ராமநத்தம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பிருந்ததா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், கொரக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதாகும் அம்மணியம்மாள் என்பவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைக்கு சென்று வருகிறார். இவர் அண்மையில் கொரக்கவாடி-பனையந்தூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலூர் மாவட்டம் கீழபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதாகும் பிரபாகரன் என்பவர், அம்மணியம்மாளுக்கு தனது மோட்டார் சைக்கிளில் லிப்ட் கொடுப்பது போல் நடித்துள்ளார்.
பின்னர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து கடலூர் மாவட்டம், ராமநத்தம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ரூ.75 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் பிரபாகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.75 ஆயிரத்தை கணக்கில் கொண்டு வராமல் ராமநத்தம் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் பிருந்தா கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரை கடலூர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் உமா, ஐபிஎஸ்., கடந்த 4 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்தநிலையில், துறைரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், பெண் காவல் ஆய்வாளர் பிருந்தா அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.