BREAKING NEWS

கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!

கடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிர் இழப்பு.!

– கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி சங்கீதா இவர்களுக்கு ரிஷி(6) என்ற மகனும் ரிஷ்மிதா(3) என்ற மகளும் உள்ளனர்.

 

இதனையே இன்று காலை வீட்டின் அருகில் உள்ள வயல் பகுதியில் சங்கீதா அவரது மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளோடு விவசாய வேலை செய்து வந்தனர். அப்போது குழந்தை ரிஷ்மிதாவிடம் சங்கீதா செல்போனை கொடுத்துவிட்டு விவசாய வேலை செய்து கொண்டிருந்தார்.

 

 

அப்போது குழந்தை விளையாட்டுத்தனமாக செல்போனை பார்த்துக்கொண்டே அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்தது. பின்பு ரிஷ்மிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது கிணற்றில் விழுந்தது தெரியவந்தது.

 

 

உடனே இது சம்பந்தமாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுபாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் பின்பு வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் குழந்தையை சுமார் அரை மணி நேரம் மேலாக தேடி உடலை பிணமாக மீட்டனர். குழந்தை இறந்தது தொடர்பாக அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதோடு, அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )