BREAKING NEWS

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!

கடலூர் அருகே மேமாத்தூர் மணிமுத்தாற்று குறுக்கே மேம்பாலம் கட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குனர் ஆய்வு.!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூர் மணிமுத்தாற்றில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அந்த கிராமத்தின் குறுக்கே ஆற்றைக் கடந்து பயணம் செய்யும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் அலுவலகம் போன்ற அரசு அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் அந்த கிராம பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

 

 

மேலும் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாதக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து நனைந்த சீருடையுடன் பள்ளிக்கு கல்லூரிக்கும், கர்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைகக்கும், செல்லும் அவல நிலையை பல ஊடகம் செய்தித்தாள்களில் வெளியாகின.

 

 

இதனால் அப்பகுதி மக்களின் நலன் கருதி தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மேமாத்தூர் மணிமுத்தாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதால், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் கொடுத்த தகவலின்படி,

 

 

ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட இயக்குனர் இன்பா, நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி, ஆகியோர் நேரில் சென்று மணிமுத்தாற்றில் தற்போது வரை அணையில் தண்ணீர் செல்வதையும், ஆற்றைக் கடந்து பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதையும் பார்வையிட்டு மேம்பாலம் கட்டுவதற்கு ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது அங்கு கூடி நின்ற மேமாத்தூர் கிராம பொதுமக்களிடம் ஊரக வளர்ச்சித் துறை உதவி திட்ட இயக்குனர் இன்பா கூறுகையில், தமிழக முதல்வர் விரைவில் உங்கள் கிராமத்திற்கு மேம்பாலம் கட்டித்தர ஏற்பாடு செய்வார் என்று தெரிவித்தார்.அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உட்பட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS