கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் படை தொடக்க விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். இணை தேசிய மாணவர் படை அதிகாரி, உதவி பேராசிரியர் முனைவர் சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தேசிய மாணவர் படை ஆறாம் பட்டாலியன் கட்டளை அதிகாரி கர்னல் விஜயகுமார்
கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து தேசிய மாணவர் படை குறித்து பட்டாளியன் அதிகாரி கர்னல் விஜயகுமார்
கணினி திரை விளக்க காட்சி மூலம் தேசிய மாணவர் படையில் மாணவ, மாணவிகள் சேர்ந்து செயல்படுவதால்
அதன் நன்மைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
முடிவில் கணிதவியல் துறை தலைவர் பேராசிரியர் பூபாலன் நன்றி தெரிவித்தார். விழாவில் துறை சார்ந்த அதிகாரிகள், கல்லுாரி பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.