BREAKING NEWS

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் காயம்

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள மாங்குளம் கிராமத்தில் கடலூர் – சேலம் நெடுஞ்சாலையில் காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காயம் அடைந்தனர்.

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சிம்போனி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (45) த/பெ சின்னசாமி என்பவர் TN07 W 6019 பதிவின் கொண்ட தளபதி ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்ஸ் காரில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

 

 

அப்போது வேப்பூரை நோக்கி கள்ளக்குறிச்சி மாவட்டம் குறால் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (38) த/பெ தனபால் தனது தந்தையை TN30 QU 1624 என்ற டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பைக்கில் பின்னால் அமர வைத்து சென்று கொண்டிருந்தார்.

 

 

இதனிடையே மாங்குளம் பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

 

கார் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்து நின்றது, இதில் பைக்கில் வந்த கோபாலகிருஷ்ணனுக்கு லேசான காயமும், தனது தந்தை தனபாலுக்கு வலது கால் முறிவு ஏற்பட்டு வலியோடு துடிதுடித்துக் கொண்டிருந்தனர். 

 

 

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற சிறுபாக்கம் போலீசார் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இந்த விபத்து குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )