கடலூர் மாவட்டம், ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்.
கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஜா.ஏந்தல் கிராமத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
முகாமில் சிறப்பு மருத்துவர்கள் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மங்களூர் வட்டார மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மருத்துவமல்லா மேற்பார்வையாளர், பகுதி கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள்,
கிராம சுகாதார செவிலியர்கள், செவிலியர்கள், சித்த மருத்துவர் ,NCD செவிலியர்கள், மக்கள் தேடி மருத்துவம் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்ஜா.ஏந்தல் கிராமம் கலைஞர் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்