கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரதபிரதமர் மோடியின் உருவப்படத்தை அகற்றியது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் உருவப்படத்தை வைக்க வலியுறுத்தி 2 பெண் கவுன்சிலர் உட்பட மூன்று கவுன்சிலர்கள் நள்ளிரவு வரை கிட்டத்தட்ட 14 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில் பாஜக தென்காசி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி ஆதரவு அளிக்காததோடு போராட்டத்தை கண்டு கொள்ளாதது பாஜகவினரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதர்ச்சி அடைய செய்துள்ளது.
கடையநல்லூர் நகர்மன்ற கூட்ட அரங்கில் பாரத பிரதமர் மோடி அவர்களின் படத்தை வைக்க கடந்த 2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி நகராட்சி கூட்டம் முடிந்த பின்னர் கூட்ட அரங்கில் பிரதமர் படம் வைக்கப்பட்டது
ஆனால் எந்தக் காரணமுமின்றி,
எந்தவித முன் அறிவிப்புமின்றி வைத்த சில மணி நேரங்களிலேயே பிரதமரின் படம் அகற்றப்பட்டது. இச்செயல் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், காவல்துறை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரிடம் முறையாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
பிரதமர் படம் வைக்கும் தீர்மானம் நிறைவேற்றி 6 மாதங்கள் ஆகிவிட்டதால் அது காலாவதி ஆகிவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால்
6 மாதத்தில் தீர்மானம் காலாவதியாகி விடும் என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் குறிப்பிட்டபடி நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ரத்து செய்யவோ அல்லது மாற்றவோ வேண்டுமென்றால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மூன்று மாதத்திற்குள் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடத்தி மாற்றவோ, ரத்தோ செய்யலாம்.
மூன்று மாதத்திற்கு பின்பு நகராட்சி நிர்வாக இயக்குநரின் முன் அனுமதி இன்றி தீர்மானத்தை மாற்றவோ, ரத்து செய்யவோ இயலாது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் விதிகளை மீறி அகற்றப்பட்ட மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம்
வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கடையநல்லூர் நகர்மன்றத்தில் ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது.
கடையநல்லூர் 13வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் திவான் மைதீன் என்பவரால் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
“கடையநல்லூர் நகர்மன்றத்தில் தீர்மானம் எண்.283 நாள்.04.01.2023 மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திரு உருவப்படத்தை நகர்மன்ற கூட்டரங்கில் வைக்க தீர்மானிக்கப்பட்டது.
கடையநல்லூர் நகரின் நலன் கருதி மேற்க்கண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திரு உருவப்படத்தை வைக்கும் தீர்மானத்தை ரத்து செய்ய கோரப்படுகிறது” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.
திட்டமிட்டு பாரத பிரதமரை அவமானப்படுத்தும் வகையிலும், களங்கம் ஏற்ப்படுத்தும் வகையிலும் இது அமைந்துள்ளது. நகர்மன்றத்தில் பாரத பிரதமர் உருவப்படம் இடம்பெறுவதால் நகரின் நலன் எந்த வகையில் பாதிக்கப்படுகிறது என தெரியவில்லை. இது பிரதமரையே இழிவுபடுத்தும் செயலாகத்தான் கருத வேண்டி இருக்கிறது என பாஜக வினர் கொந்தளிந்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க பாஜக கவுன்சிலர்கள் மற்றும் நகர பாஜகவினர் அரசிற்கு புகார் செய்தனர். தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் பாரதபிரதமர் உருவப்படத்துடன் வந்த பாஜக கவுன்சிலர்கள் உருவப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் நகர்மன்ற தலைவர் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர். கூட்டம் முடிந்து தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளியேறிய நிலையில் பாஜக கவுன்சிலர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நகர்மன்ற ஆணையர் மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் பலனில்லாமல் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. மாலையில் அலுவலக நேரம் முடிந்த நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் பதட்டம் அதிகரித்தது. பெண் கவுன்சிலர்களுக்கு சிறு குழந்தைகள் வீட்டில் இருந்த போதிலும் அவர்கள் மிகுந்த மன உறுதியுடன் போராட்டத்தை தொடர்ந்தனர். நேரம் ஆக ஆக நகராட்சி அலுவலகம் முன்பு கவுன்சிலர்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் எதிராக திமுகவினரும் குவிய துவங்கினர். இதனால் பதட்டம் மேலும் அதிகரித்தது. இரவு 12 மணி வரை போராட்டம் நீடித்த நிலையில் காலையிலேயே தென்காசி பாஜக மாவட்டத்தலைவர் ஆனந்தன் அய்யாசாமிக்கு தகவல் தெரிவித்த போதும் அவர் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்து பாஜக கவுன்சிலர்களுக்கு ஆதரவு தெரிவித்து பக்க பலமாக இருக்க வேண்டிய மாவட்ட தலைவர் அதை கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்குடன் நடந்து கொண்டது பாஜக வினரை மட்டுமின்றி பொதுமக்களையும் அதர்ச்சி அடைய செய்துள்ளது. பாஜக மாவட்ட தலைவராக ஆனந்தன் பொறுபேற்று 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் அவர் மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
நகராட்சியில் பாரதபிரதமர் நரேந்திரமோடி உருவப்படம் வைப்பது குறித்த பிரச்சனை இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் மாவட்டத்தலைவர் அதுகுறித்து கவனம் செலுத்தவில்லை. தனது தலைவர் அவமரியாதை செய்யப்பட்டதை அறிந்தும் கண்டு கொள்ளாத தலைவர் என்னத்த சாதித்து விட போகிறார் என பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இரவு 12 மணியளவில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான் படம் வைப்பது குறித்து உத்தரவாதம் அளித்ததால் சுமார் 14மணி நேர போராட்டம் முடிவிற்கு வந்தது.
தென்காசி பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன அய்யாச்சாமியின் செயல்பாடு பாஜகவினர் மட்டுமின்றி அனைத்துதரப்பினரிடம் அவநம்பிக்கையை ஏற்ப்படுத்தியுள்ளது.