கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மணல் – மண் – சாராயம் – சூதாட்டம் – கஞ்சா – எல்லாவற்றிற்கும் ரேட் வைக்கப்பட்டுள்ளதாம்.
இவை அனைத்திற்கும் வசூல் ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டு, ரகசிய கூட்டங்களில் விருந்துடன் சந்திப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாதாந்தம் லாரி ஒவ்வொன்றுக்கும் ₹25,000 மாமூல் –
காளசமுத்திரம், வாழியூர், அத்திமலைப்பட்டு, புதுப்பாளையம், வண்ணான்குளம், கொங்கராம்பட்டு, குப்பம், நேதாஜி உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 28 லாரிகள் பங்கேற்கின்றன. கந்துவட்டி கும்பல்களுக்கு காவல்துறை ஆதரவு
அதிமுக கிளைச் செயலாளர் விஜயகுமார், திமுக பிரமுகர் விக்னேஷ் @ விக்கி, மற்றும் பலர் காவலர்களுக்கு மாமூல் கொடுத்து கந்துவட்டி தொழில் நடத்துகின்றனர்.
ஏற்கனவே, அழகுசேனை பெருமாள், லட்சுமி ஆகியோர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் இருளில் தள்ளப்பட்டன.
காவல்துறையில் FIR, கைது, தடுப்பு – எல்லாம் விலைப்பட்டியல் அடிப்படையில்:
உணவகங்களில் விலைப்பட்டியல் போடுவது போல, கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்,
• ஒருவர் மீது FIR போட – ₹XXXX
• கைதாக வைக்க – ₹XXXX
• தலைமறைவாக வைக்க – ₹XXXX
• வழக்குகளை ஊத்தி மூட – ₹XXXXஎன பட்டியல் போட்டு வசூல் செய்கிறார்களாம்.
மறைமுக மாமூல் கோட்டத்தை இயக்கும் பழக்கடை செல்வம், முன்னா உள்ளிட்டோர் இளம் பெண்கள் சப்ளை செய்யும் குற்றச்சாட்டும் பல புகார்களில் இடம்பிடிக்கிறது.
வெள்ளைக்கோட்டையில் நடக்கும் விரிவான பிழைகள் – எஸ்பி சுதாகர் கவனிப்பாரா? ஐஜி காப்பு கட்டுவாரா?
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் குற்றங்களை கட்டுப்படுத்த முயற்சி எடுத்தாலும், மாவட்ட காவல்துறையின் மாமூல் சூழ்நிலை அவரையும் கட்டுப்படுத்துகிறது.