கத்தி முனையில் இளைஞரிடம் பைக் பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மரித்து கத்தி முனையில் மிரட்டி பைக்கை பறித்துச் சென்றனர்.
சென்னை அசோக் நகர் மாந்தோப்பு காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகன் சரண் நிர்மல் (22) இவர் மதுரையில் உள்ள போகன் சம்ரஜெயா அறக்கட்டளையில் தற்காப்பு பயிற்சி படித்து வருகிறார். இந்நிலையில் தனது விலை உயர்ந்த பைக்கில் மதுரை செல்வதற்காக சென்னையிலிருந்து கிளம்பி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி விலை உயர்ந்த மோட்டார் பைக்கை பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரண் நிர்மல் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பெயரில் சிறுகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மோட்டார் பைக்கை பறித்துச் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
