BREAKING NEWS

கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!

கந்தனேரி டாஸ்மாக்கில் அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர்!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ள கந்தனேரி டாஸ்மாக்கில் கூடுதலாக விலை வைத்து அடாவடி வசூல் வேட்டையில் ஈடுபடும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர்.

 

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகில் உள்ளது கந்தனேரி டாஸ்மாக் மதுபான விற்பனை கடை. இந்த மது கடையில் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கொண்டு ரூபாய் 130 க்கு விற்க வேண்டிய மது பாட்டிலை ரூபாய் 140 க்கு கூடுதலாக ரூபாய் 10 விலை வைத்து விற்பனை செய்து குடிமகன்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று நண்பகல் செய்தியாளர்கள் சிலர் கந்தனேரி டாஸ்மாக் மதுபான கடைக்குச் சென்று கூடுதலாக விலை வைத்து விற்கப்படுவதன் விளக்கத்தை கேட்டுள்ளனர் .அதற்கு கடையில் இருந்த மேற்பார்வையாளர் நாங்கள் அப்படித்தான் விற்போம். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று ஒருமையிலும், அருவெறுக்கத் தக்க வகையிலும் பதில் அளித்துள்ளனர்.

 

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஃபேக்ஸ் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர் செய்தியாளர்கள். வேலூர் மாவட்டத்தில் இப்படி பல கிராமங்களில் உள்ள கடைகளில் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மாவட்ட மேலாளர் மற்றும் விற்பனை பிரிவு அதிகாரியுடன் இணக்கமாக கைகோர்த்துக் கொண்டு கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொள்ளை லாபம் அடித்து வருவது ஒரு தொடர்கதையாகவே மாறி உள்ளது.

 

குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு என்று சொல்வார்கள். அதனால் குடிகாரர்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்ற ரீதியில் குடிகாரர்களிடம் கொள்ளையடிக்க தொடங்கி விட்டனர் இந்த பஞ்சமா பாதகர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பொற்கால ஆட்சியில் இது போன்ற கூடுதல் விலை வைத்து டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது…

 

அடியோடு நிறுத்த என்னென்ன உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமோ அவற்றை பிறப்பித்து விலையை முறையாக அறிவித்தது அறிவித்தபடி விலை பட்டியலில் உள்ளபடி குடிமகன்களுக்கு வழங்க வேண்டும் என்பதே குடிமகன்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக உள்ளது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்கிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS