கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்புகளான பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா, க்ரடாய் அமைப்பு, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர் அசோசியேசன், கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தொழில்துறை நிறுவனங்கள், இன்று கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக, கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இது சம்பந்தமாக கன்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அகில இந்திய கட்டுனர், வல்லுனர் சங்க தலைவர் கணேஷ் குமார் கூறுகையில்.. கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கன்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் மட்டும் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர்,
இதன் மூலம் கோவையில் 450 கட்டுமானம் நடைபெறும் இடங்களில் கட்டுமான பணிகள் பாதிப்படைந்துள்ளது. நடைபெறுகின்ற நிதி ஆண்டில் மூன்று முறை கனிமப் பொருட்களான கருங்கல், ஜல்லி வகைகள், எம்சாண்ட், மற்றும் பி சாண்ட், விலை 30 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இவற்றை மத்திய மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். மேலும் ஆர்பாட்டத்திற்க்கு பின்னர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு சென்று இது சம்பந்தமாக ஆட்சியரிடம் மனு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிரடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, கோயமுத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்க தலைவர் சகாயராஜ், மற்றும் சம்பத்குமார், ரமேஷ் குமார், ராஜ்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.