கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிரண் சுருதி, தலைமையில் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் பிரபு, வாழைப்பந்தல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மணிவண்ணன், பூஜா, எஸ்பி தனிப்படை போலீசார் ரகுராமன், மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பனை மரத்தில் கட்டி வைக்க பட்டிருந்த பனைக்கல்லை போலீசார் அழித்தனர். மேலும் அங்கு பசிக்க வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் பனைக்கல்லை பறிமுதல் செய்து அழித்தனர்.
மேலும், ஆரூர், பொன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் பனை மரத்தில் பனைக்கல்லை கட்டி விற்பனை செய்கின்றனரா என சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், வாழைப்பந்தல் போலீசார் உட்பட பலர் உடன் இருந்தனர்.