BREAKING NEWS

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பது மிகப் பொருத்தமானது. 

 

வெறுப்பும், வேற்றுப்படுத்தலும், வன்மமும், வன்முறையும் தலைவிரித்தாடச் செய்து, நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயக அமைப்பு முறையை, சமூகநீதியை, பன்முகத்தன்மையை, மனித உரிமைகளைத் தகர்க்கும் வேலைகளை ஒன்றியத்தை ஆளும் பாஜகவும் அதன் குடும்ப அமைப்புகளும் தடையின்றி செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

இவர்களிடமிருந்து இந்தியா எனும் பெருங்கனவை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கும் வகையில் செப்டம்பர் 7, 2022 அன்று குமரி முனையிலிருந்து “இந்திய ஒற்றுமைப் பயணம்” எனும் ஒரு பெருமுயற்சியை ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் இந்த அறிய முயற்சி இன்றியமையாத அவசியமான ஒன்று. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவின் சித்தாந்தத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசை அகற்றுவதற்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும் இந்த யாத்திரை பயன்படும் என்று திடமாக நம்புகிறேன். 

 

150 நாட்களில் ஒரு கோடி பேரை சந்திக்கும் இந்த பரப்புரை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )