BREAKING NEWS

கமுதியில், திமுக மாவட்ட செயலாளர்  காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

கமுதியில், திமுக மாவட்ட செயலாளர்   காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.

 

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

கமுதியில்,திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில்,

 

 

சமூக நலத்துறை சார்பில், 286 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார்,

 

 

தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகரச் செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகரச் செயலாளர் முத்துஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜகோபால்,

 

ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள்,மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

 

அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் பேழை வழங்கப்பட்டது.

 

பின்னர் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )