BREAKING NEWS

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த உருவாட்டி (75) என்பவரின் மகள் காளீஸ்வரி (39) என்பவருக்கும் திருமணமாகி, இவர்களுக்கு 19 வயது மகன், 16 வயது மகள் ஆகிய இருவர் உள்ளனர்.

 

உதயசூரியன் மதுபோதையில் தனது மனைவி காளீஸ்வரியை அடிக்கடி அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் உதயசூரியன் மது போதையில் தனது மனைவி காளீஸ்வரியை அடித்துள்ளார்.

இதனை தடுக்க வந்த மாமனார் உருவாட்டிக்கும், இவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாமனார் உருவாட்டி, கோடாரியால் தனது மருமகன் உதயசூரியனை தலை மற்றும் கை, கால் பகுதியில் வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த உதயசூரியன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

ஆனால் செல்லும் வழியில் இறந்து விட்டார் அவரது உடல் கமுதி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் உருவாட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்படுத்தி யுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )