BREAKING NEWS

கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, கமுதியில் உள்ள கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்..

 

 

பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா இலவச மீதி வண்டியினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வழங்கினார்.

 

 

 ராமசாமி பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 55 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியினை வழங்கி பேசும்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்காக தமிழக முதல்வரால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக 2200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

 முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி முடங்கி கிடக்கும் தொகுதி அல்ல முன்னேறிக் கொண்டிருக்கும் தொகுதி என்று பேசினார்.

 

 பின்பு அரசு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் கரகாட்டம் ஆடி அசத்தினர்.

 

 

கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, முன்னாள் எம்எல்ஏ முருகவேல், மாவட்ட கவுன்சிலர் சசிகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )