கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

கம்பம் அருகே அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டியில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாம் போக அறுவடை முடிந்த பின்பு விவசாயிகளுக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லும் விதமாக பங்குனி பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவானது 3 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். இதில் இரண்டாம் நாளான இன்று சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் பானைகளை சுமந்து ஊர்வலமாக சென்று கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து இறைவன் மற்றும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை முளைப்பாரி ஊர்வலமும், மூன்றாம் நாளான நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் சிறப்பாக நடைபெறும்.
மேலும் இந்த பொங்கல் திருவிழாவில் நாராயணத்தேவன்பட்டி அருகில் உள்ள சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி போன்ற ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் சென்றனர்.