BREAKING NEWS

கம்மவார் சங்கம் சார்பில்; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கம்மவார் சங்கம் சார்பில்; கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கம்மவார் சங்கம் சார்பில் யுகாதி திருவிழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாணவ மாணவி கலை நிகழ்ச்சி மற்றும் யோகா போட்டிகள்,

 

 

10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலன் தலைமையில் கம்மவார் சங்க செயலாளர் அழகர்சாமி முன்னிலையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

 

இந்நிகழ்ச்சியில் ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், அவைத் தலைவர் அப்பாசாமி, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி, இளையரசந்தல் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜ், முன்னால் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி,

 

 

ஊராட்சி மன்ற துணைத் தலைவி ரேவதி, அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, ராமசுப்பு, வேல்ராஜ், அம்பிகா பாலன், வெங்கடேஷ், விக்னேஷ், கெங்காராஜ், அய்யனார்சாமி, சந்திரசேகர்,கோபி, முருகன் ,பழனி குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS