கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.

தஞ்சாவூர் மாவட்டம், கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.சுப்பிரமணியன் தலைமையில் செங்கிப்பட்டியில் நடைபெற்றது.
கூட்டத்தில் வி.தொ.ச.மாவட்ட செயலாளர் இரா.இராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிகாட்டினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில்,கல்லணையில் மின் தட்டுப்பாட்டை போக்கிடவும்,மின் அழுத்த குறைபாட்டை போக்கிடவும் புதிய மின் மாற்றி அமைத்திட வேண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டம், சாலை மறியல் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து,
கடந்த ஜீலை மாதம் பூதலூர் வட்டாட்சியர் தலைமையில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்றைய தினம் கல்லணையில் புதிய மின்மாற்றியை திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை.சந்திரசேகரன் அவர்களால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதற்க்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூரிலிருந்து செங்கிப்பட்டி வழியாக கரியப்பட்டி கிராமத்திற்கு காலை7 மணி மாலை 6மணி என இயங்கி வந்த அரசுபேருந்து எண் 30-யை மறுபடியும் அதே தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும், அதேபோல் தஞ்சாவூரிலிருந்து மனையேறிப்பட்டி,
வெண்டையம்பட்டி வழியாக சொரக்குடிப்பட்டி கிராமத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தை மீண்டும் இயக்கிட வலியுறுத்தியும்,சானூரப்பட்டி ஊராட்சி பழையகரியப்பட்டி கிராமத்தில் பகுதி நேர அங்காடி அமைத்து தர கோரியும்,
செங்கிப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சிறிய மழைக்கே குளம்போல் தேங்கி நிற்க்கும் மழை நீரை முழுமையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 26 அன்று சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும்,
மேலும்,செப்டம்பர் 30 ஆம் தேதி மகத்தான தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு நாளை (1961 செப்டம்பர் 30) பொதுக்கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள் என்ற முறையில் கடைப்பிடிப்பது,
விவசாயத் தொழிலாளர் குடியிருப்புகளில் தோழர் பி. சீனிவாசராவ் திருவுருவப்படத்தை டிஜிட்டல் முறையில் தயாரித்து, ஊரின் மையத்தில் வைத்து, உறுப்பினர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்துவது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.