கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பதவி உயர்வு பெற்ற மாவட்டகல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் சார்பாக கரூர் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்ற திருமதி. காமாட்சி திருமதி. செல்வமணி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர் பெற்ற தலைமை ஆசிரியர்கள் ரத்தினம், கோபு, மல்லிகா மற்றும் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கரூரில் இன்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வள்ளி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் , மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார்.மாவட்ட நிர்வாகிகள், தங்கராஜ், சக்திவேல், உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதவி உயர்வு மற்றும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, மாநில பொருளாளர் இளங்கோ, மாநில அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாநில மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, முன்னாள் மாநில தலைவர்கள் சத்தியமூர்த்தி, பீட்டர் ராஜா, மாநில இணைச்செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்