கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான செஸ் அகாடமி -ன் 31வது சதுரங்க போட்டி
31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான சதுரங்க போட்டி காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் நடைபெற்றது.
கரூரில் 31வது கரூர் மாவட்ட அளவிலான சிறுவர் சிறுமிகளுக்கான ஓபன் காஸ்பரோவ் ஸ்மார்ட் செஸ் அகாடமி மற்றும் கரூர் விளையாட்டு முரசு சார்பில் சதுரங்க போட்டி ஆதிரன் லோயல் பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தர்.
இப்போட்டிகளில் 8,10.12,15 ஆகிய வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பிரிவிலும் மற்றும் ஓபன் பிரிவிலும் பல்வேறு மாவட்டத்திலிருந்து சுமார் 439 க்கு மேற்பட்ட சதுரங்க வீரர்கள் வீராங்கனைகள், கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் கரூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, ரகுபதி சேர்மன் ஆதிரன் லோயல் பள்ளி, சுழற் கோப்பை ரொக்கப் பரிசு மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கமும் சான்றிதழும் வழங்கினர்.