BREAKING NEWS

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.

கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்.

பெண் மீது கொலை வெறி தாக்குதல்… கற்பழிக்க முயற்சி.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் பெண்… கண்ணீருடன் கணவர் பேட்டி…

 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மாளியாப்பட்டு பகுதியில் மாந்தோப்பில் காவல் பணி மற்றும் மாடு மேய்த்து வருபவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சுமித்ரா இருவரும் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வீட்டிற்கு கிளம்பலாம் என்று வேறு ஒரு தோட்டத்தில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து வருவதாக மனைவி சுமித்ராவிடம் சொல்லிவிட்டு ராமமூர்த்தி சென்றுள்ளார். அப்பொழுது சுமித்ராவிடம் ஏதோ நாய் குலைக்கிறது என்னவென்று பார் என்று கூறியுள்ளார்.

 

அதற்கு சுமித்ரா அவங்க யாராவது சரக்கு சாப்பிட்டு இருப்பாங்க அதனால நாய் குரைக்கும்.. என்று கூறியுள்ளார் ஒருவேளை யாராவது மாங்காய் திருட வந்திருக்காங்களா என்று ராமமூர்த்தி சொல்லவே பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளார் மாட்டை அவிழ்த்து கொண்டு வந்து மனைவியை அழைத்துள்ளார். அதற்கு சுமித்ராவிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அக்கம் பக்கம் அதே தோட்டத்தில் தேடி உள்ளார்.

 

அப்பொழுது ஆடை எல்லாம் அவிழ்த்து அலங்கோலமான நிலையில் வாய் மற்றும் தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மா மரக்கிளையின் மீது ஆடை ஏதும் இல்லாமல் சுமித்ரா இருப்பதை பார்த்துள்ளார். அதன் அருகே வேறொரு நபரும் ஆடையற்ற நிலையில் நின்று மனைவியை ஏதோ செய்து கொண்டிருப்பதை பார்த்து அங்கிருந்து கல்லை எடுத்துக் கொண்டு அவரை அடிப்பதற்காக விரட்டி உள்ளார்.

 

அதற்குள் கூச்சல் போட்டுள்ளார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சுமித்ராவை மரக்கிளையிலிருந்து கீழே இறக்கி அவர் மீது புடவையை போர்த்தி உள்ளனர். உடனடியாக காவல்துறைக்கும் ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாரும் வந்து விடவே விசாரணையை துவக்கி உள்ளனர்.

 

ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சுமித்ராவை வேலூர் தனியார் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த இருசக்கர வாகனத்தை உறவினர்கள் வசம் ஒப்படைத்து விட்டு மனைவியை சுபத்ராவை ராமமூர்த்தி வேலூர் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றுள்ளார் அப்போது ஒரு நபர் வந்து ஒரு இளைஞன் ஒரு இளைஞர் அந்த வண்டி என்னுடையது என்றும் என்னுடைய நண்பர் தான் அதை வாங்கி வந்தார் ஆகவே இந்த வண்டியை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கேட்டுள்ளார்.

 

உடனடியாக போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து வந்து என்ன நடந்தது என்று விசாரித்த போது போலீசாரிடம் சுமித்ராவை நான் தான் வன்புணர்வுக்கு அழைத்ததாகவும் அதற்கு அவர் வர மறுத்ததால் அவரை கண்ணம் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பலமாக தாக்கி அவரை நிலைகுலையச் செய்து அவருடன் உறவு கொள்ள முயற்சி செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

இதை அடுத்து அவருடைய புகைப்படத்தை போலீசார் சுமித்ராவின் கணவர் ராமமூர்த்திக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இவர் தான் நீங்கள் பார்த்த ஆளா என்று கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆம் என்று ராமமூர்த்தி கூறியதாகவும் அதன் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரித்ததில் அவர் பெயர் கார்த்தி என்றும் எலக்ட்ரிசியன் வேலை செய்து வருவதாகவும் மேற்கொண்டு போலீசார் அவர்களை விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த சுமித்ராவின் கணவர் ராமமூர்த்தி கூறும் பொழுது தலையெல்லாம் காயங்களுடன் இரண்டு காதுகளிலும் ரத்தம் வடிந்து இரண்டு தாடைகளும் உடைந்த நிலையில் துணி ஏதும் இல்லாமல் என் மனைவி அலங்கோலமாக மாமர கிளையின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்தார் அவர் எதிரில் ஒரு இளைஞன் ஆடை இல்லாமல் இருந்தார்.

நான் கல் எடுத்து அவனை அங்கிருந்து விரட்டி விட்டு என் மனைவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். ராம மூர்த்தியின் உறவினர் வெங்கடேசன் கூறும்போது ராமமூர்த்தியின் குரல் கேட்டு ஓடிப்போய் பார்த்து ஆடையற்ற நிலையில் தரையில் கிடந்த சுமித்திராவின் மீது துணியை எடுத்து போர்த்தி ஆம்புலன்சுக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தோம் என்று கூறினார்.

 

மேலும் சம்பவம் நடந்த பகுதியிலிருந்த ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து சந்தேகப்பபடும்படியான நபர்களை போலீசார் அழைத்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது கூறப்படுகிறது மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும் வேளையில் நிலத்தில் வேலை செய்பவர்கள் அப்பொழுதுதான் வீட்டுக்கு திரும்பும் நேரம் இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கொடூரமாக தாக்கி அவளை கற்பழிக்கும் முனைந்துள்ளது.

 

அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது சுமித்ராவை சாகும் அளவிற்கு தாக்கியது ஒருவர் மட்டும் தானா அல்லது அவருடன் வேறு யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

எப்பொழுதும் அந்தப் பகுதியில் இளைஞர்கள் இரண்டு மூன்று பேர்கள் ஆகும் அதற்கு மேலும் சேர்ந்து கொண்டு மாங்காய் தோப்பு மற்றும் ஏரி பகுதிகளில் மது அருந்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது அன்றும் அப்படி அங்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மது அருந்து கொண்டிருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர் மது உடன் தற்போது கஞ்சாவும் சேர்ந்து கொள்ள தாங்கள் செய்வது என்னவென்று அறியாத அளவிற்கு அவர்களுக்கு போதை தலைக்கு மேல் ஏறி விடுகிறது கஞ்சாவை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் இது காவல்துறைக்கு ஒரு சவாலாக இருக்கிறது.

 

ஏற்கனவே பணமடங்கி காவல் நிலையம் அடங்கியுள்ள லத்தேரி காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியில் நடந்த பால்காரர் ஒருவரின் கொலையில் இதுவரை பல்வேறு குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை..

 

என்பதற்காக வும் துப்பு புலன் விசாரணையில் சுணக்கம் இருந்ததாகவும் சரியாக துப்பு துலக்க வில்லை என்றும் லத்தேரி காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் உட்பட அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே… இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்பது அனைவரையும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

CATEGORIES
TAGS