கலவை அருகே நடைபெற்ற எருதாட்டம் நிகழ்ச்சியில் சீரிப் பாய்ந்த காளையால் இளைஞர்க்கு காயம் ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள், தமிழ் வருட பிறப்பு, ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு எருதாட்டம் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள் பரமேஸ்வரி ரஜினி, வழக்கறிஞர் முரளி ஆகியோர் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஊர் பொதுமக்கள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை செய்யப்பட்டது.
இத்திருவிழாவானது ஊர் நன்மைக்காகவும், பொதுமக்கள், கால்நடைகள் ஆகியவை நோயின்றி வாழ காலம்காலமாக நடைபெற்று வருகிறது.
தொடந்து மாலை எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 10 க்கு மேற்ப்பட்ட காளைகள் கலந்துக் கொண்டு சீரிப் பாய்ந்தது இதனை அடக்கும் விதமாக இளைஞர்கள் கம்பீரமாக எருதுகாட்டினர்.
இந்த திருவிழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முகாம் செயலாளர் ஸ்ரீதர், பாதுகாப்பு பணிக்காக உதவி ஆய்வாளர் ரமேஷ், பூஜா உள்ளிட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இத்திருவிழாவை கான மாம்பாக்கம் சுற்றியுள்ள பென்னகர், சொரையூர், வேம்பி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.