கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஸ்ரீ நெல் ரகம் 1 மூட்டை அதிகபட்ச விலையாக ₹1689 விற்பனையானது விவசாயிகள் மகிழ்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாழைப்பந்தல் சாலையில் கடந்த 1976-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இங்கு கலவை, மாம்பாக்கம், வாழைப்பந்தல், திமிரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விலை நிலத்தில் விளையும் நெல் மற்றும் பயிர் வகைகளை கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு லோடு ஆட்டோ, டிராக்டர், மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.
மேலும் தற்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் விற்பனை அதிகரித்துள்ளது. கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்றைய விலை நிலவரம் கோ 51 ரகம் ஒரு மூட்டை 75 கிலோ அதிகபட்ச விலை ₹ 1309, குறைந்தபட்ச விலை ₹1229, (குண்டு) 37 ரகம் ஒரு மூட்டை 75 கிலோ அதிகபட்ச விலை ₹1275, குறைந்தபட்ச விலை ₹1234,
மகேந்திரா நெல் ரகம் ஒரு மூட்டை 75 கிலோ அதிகபட்ச விலை ₹1619, குறைந்தபட்ச விலை ₹1469,ஆர்என்ஆர் நெல் ரகம் ஒரு மூட்டை 75 கிலோ அதிகபட்ச விலை ₹1672, குறைந்தபட்ச விலை ₹1569, ஸ்ரீ நெல் ரகம் ஒரு மூட்டை 75 கிலோ அதிகபட்ச விலை ₹1689, குறைந்தபட்ச விலை ₹1689க்கு விற்கப்பட்டது. நேற்று கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ₹1700 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. என கலவை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மதன்பாண்டியன் தெரிவித்தார்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.