கலவை பேரூராட்சியில் தமுமுக மற்றும் மமக கட்சி சார்பில் நகர செயல்வீரர்கள் கூட்டம்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேரூராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமுமுக மற்றும் மமக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முகமது அலி, தலைமை தாங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் கிஷோர் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் இப்பான் அலி , ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி மாநில நிர்வாகி இம்ரான் பாய், வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் புதுமடம் அலீம், கலந்து கொண்டு சிறப்புரையாற்றி திருமணங்கள் நிறைவேற்றப்பட்டது.
1.மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை ஏற்று தொழிலாளர்களின் 12 மணி நேர
வேலையை ரத்து செய்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.
2.மே 21 மறைமலை நகரில் நடைபெறும் சமூக நீதி மாநாட்டிற்கு அதிக அளவில் சென்று மாநாட்டை வெற்றி பெற செய்வது.
3. கலவையில் உள்ள வகுப்பு வரியத்திற்கு சொந்தமான இடத்தினை பாதுகாப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மமக நகர தலைவர் மாகுப் பாஷா, நன்றி கூறினார்.