BREAKING NEWS

கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.

கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கல்யாணம்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை மதுரா பன்னீர் தாங்கல் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு விழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி ஸ்ரீ கங்கை அம்மன், பொன்னியம்மன் கூழ்வார்க்கும் விழாவும்,

 

தொடர்ந்து மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது 24ஆம் தேதி பூங்கரகம் ஊர்வலமும் 25 ஆம் தேதி ஸ்ரீ மாரியம்மன் க்கு கூழ்வார்க்கும் விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் நிறைவு நாளான நேற்று காலை திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

 

தொடர்ந்து ஸ்ரீ அர்ஜுனன் ஸ்ரீ திரௌபதிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பொதுமக்கள் சிறு வரிசை பொருட்களை பன்னீர்தாங்கல் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலை வந்து அடைந்தனர். பின்னர் வேத பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாணம் விமர்சியாக நடைபெற்றது.

 

தொடர்ந்து, திரௌபதி அம்மன் பிறப்பும், திருக்கல்யாணமும் என்ற தலைப்பில் சொற்பொழிவு செல்வன் பார்த்திபன், சொற்பொழிவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS