BREAKING NEWS

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும்  இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில்  பயிர்கள் மேலாண்மை, அட்மா திட்டத்தின் கீழ்  விவசாயிகள் பயிற்சி  மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.

சேலம்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படும் இராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் பயிர்கள் மேலாண்மை பயறுவகை, எண்ணெய்வித்துக்கள், பருத்தியில் ஒருங்கினைந்த பயிர் மேலாண்மை குறித்த தொழில்நுட்ப பயிற்சி அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவவில் நடைப்பெற்றது.

 

 

பயிற்சியில் அட்மா திட்ட தலைவர் டாக்டர்.செழியன் அவர்கள் கலந்துக்கொண்டு தலைமை வகித்தார்.வேளண்மை உதவி இயக்குனர் திரு.த.குமாரசாமி அவர்கள் கலந்துகொண்டு முன்னிலை வகித்தார். மேலும் அவர்கள் கலந்துகொண்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்து பேசினார்.

 

 

வட்டார தொழில்நுட்ப மேலளார் திருமதி .அ.சுமித்ரா அவர்கள் கலந்துக்கொண்டு அட்மா திட்டம் செயல்பாடுகள் குறித்தும் விதைநேர்த்தி குறித்த செயல்விளக்கம் செய்து காண்பித்தார்.திரு. பி.ஹரிகிருஷ்ணன் முனைவர் சேலம் வேளாண் அறிவியல் நிறுவனம் அவர்கள் கலந்துகொண்டு பயறுவகை, நிலக்கடலை, பருத்தி பயிர்களில் சாபடி தொழில்நுட்பங்களை பற்றியும் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி விளக்கம் அளித்தார்.

 

உதவி தொழில்நுட்ப மேலளார் திருமதி.மா.தமிழ்ச்செல்வி செல்வி.கு.திலகவதி மற்றும் திரு.ஆர்.கே.சி.பாலு, முன்னோடி விவசாயி ஆகியோர் பயிற்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் பயிற்சியில் 50 க்கும் மேலான விவசாயிகள் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெற்றனர். பயிற்சின் முடிவில் அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை, உணவு வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )