கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதை சேகரிப்பு.
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வருகின்ற செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி NSS தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் TCS நிறுவனத்தின் பணியாளர்கள் எலைட் பள்ளியின் தாளாளர் மற்றும்
மாணவர்கள் கிரீநீடா அமைப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்களுடைய தலைமையில் சேகரித்தனர். இதில் எலைட் பள்ளியின் தாளாளர் ஜெபாஸ்டின் பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், நலவாரிய உறுப்பினர்கள் கிரீன் நீடா அமைப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.