BREAKING NEWS

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.

தஞ்சாவூர், கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது 

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சோழமண்டல தளபதி என போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாளை முன்னிட்டு,

 

மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் திருவுருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

கோ.சி.மணி தி.மு.க.வில் ஆற்றிய அரும் பணிகளை நினைவு கூறும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம்,

மாநக திமுக செயலாளரும், தஞ்சை மேயருமான சண்.இராமநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி,

மாவட்ட திமுக பொருளாளர் எல்.ஜி.அண்ணா, தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் இறைவன், மருத்துவ அணி அமைப்பாளரும்,

 

தஞ்சாவூர் துணை மேயருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்தி கேசவன்,ஒன்றிய செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கோ.சி.மணியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்..

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )