BREAKING NEWS

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி பள்ளி மாணவர்களுக்கு பரிசு

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு பரிசு தொகையினை முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வில்லிசேரி கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில், முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, 2024-2025 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு கேடயம் மற்றும் பரிசு தொகையினை முன்னாள் திமுக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கினார், மற்றும் இந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கோவில்பட்டி திமுக வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெய கண்ணன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவசக்தி கணேஷ் , உதவி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர், மற்றும் மாவட்ட திமுக கழக நிர்வாகி திரு செல்வராஜ், நாலாட்டின்புதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார், கோவில்பட்டி திமுக தொழில்நுட்ப அணி பழனிகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ராகவன்,மற்றும் திமுக கிளைக் கழக செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS