BREAKING NEWS

தமிழ்நாடு கலை இலக்கிய மேடை மற்றும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வு..

தமிழ்நாடு கலை இலக்கிய மேடை மற்றும் தொடுவானம் கலை இலக்கிய பேரவை நிகழ்வு..

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து துர்த்துக்குடியில் ஒரு கலை இலக்கிய நிகழ்வை நடத்தியது.

நிகழ்வில், ஆ.மாரிமுத்து எழுதிய “உளி தீண்டா கல்லோவியம் கவிதைத் தொகுப்பும் சப்திகா டொமிலா எழுதிய “கொடிய மரமா” சிறுகதைத் தொகுப்பும், கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய “தேரியாயணம்” நாவலும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. படைப்புகள் குறித்த திறனாய்வை முறையே லில்லி மலர், சொ.பிரபாகரன், மி.சு.எழிலரசி ஆகியோர் முன்வைத்தனர்.

 

 

நிகழ்வை ச.தே.செல்வராசு தலைமைதாங்கி நடத்திக்கொடுத்தார். படைப்பாளர்கள் மூவரும் தங்களது ஏற்பரையை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் ஆகம் கலைக்குழு, தொன்பாஸ்கோ இளையோர் இயக்கம் மற்றும் ஆழி கலைக்குழுக்களின் மூன்று குறு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.

 

நாடகங்கள் குறித்த தங்களது பார்வையை எம்.எம்.தீன், லட்சுமி விசாகன் உள்ளிட்டோர் சுருக்கமாக முன்வைத்தனர். ஔவை காலத்தில் சமூகம் என்ற தலைப்பில் தங்கத்துரையரசி சிறப்புரையாற்றினார். நிகழ்வை தொடுவானம் அமைப்பின் தலைவர் நெல்லை தேவன் தொகுத்து வழங்கினார்.

 

 

தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பாக லட்சுமி விசாகன் நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகங்களும் சமகால அரசியல் சூழலைப் பகடி செய்ததோடு அரசியல் குறித்து வெகுமக்களுக்கு கற்பிப்க்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையிலும் அமைத்திருந்தது வெகுசிறப்பு.

 

தொடுவானம் கலை இலக்கியப் பேரவை நிகழ்வை வெகு சிறப்பாக வடிவமைத்து நடத்தியிருந்தது மகிழ்ச்சி. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், த.மு.எ.சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்து கலந்துகொண்டது கூடுதல் சிறப்பு. முத்துநகரில் இத்தகைய ஒரு வலுலான தொடக்கம் அடுத்தடுத்து எழுச்சிமிகு நிகழ்வுகளை நடத்திட முடியும் என்ற நம்பிக்கையை அனைவரின் மனதிலும் விதைத்தது.

 

CATEGORIES
TAGS