கல்பகனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை,ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு.

தமிழக முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 202-23 ஆம் ஆண்டுக்கான கிராம ஊராட்சிகளில் அமிர்த குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில்,பல்வேறு கிராம ஊராட்சிகளில் அமிர்தகுளம் புதிய நீர்நிலைகளை உருவாக்கிடவும், மேலும் உருவாக்கப்படும் புதிய நீர் நிலைகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருக்க வேண்டும் எனவும்,
ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை புதுப்பித்துக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது,இத்திட்டத்தினால் அருகில் உள்ள விவசாய தோட்டங்கள் கிணறுகள் நீர் ஆதாரமாக விளங்கும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்புமணி நகர் பகுதியில் இன்று அமிர்தக்குளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் ஆத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர்.பத்மினி தர்ஷினி அவர்கள் கலந்து கொண்டு பூமி பூஜை போடப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் ஆத்ம குழு தலைவர் டாக்டர்.செழியன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாள், கல்பகனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாத்தி காளிமுத்து,துணைத்தலைவர் செல்வம்,வட்டார வளர்ச்சி ஆணையாளர் அசோகன், உதவி பொறியாளர் விஸ்வநாதன்,பணி மேற்பார்வையாளர் வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.