கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது.
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பப்பட்ட தஞ்சை கரந்தை கருணாசாமி ஆலயத்தில் சூரிய பூஜை சிறப்பாக நடைப்பெற்றது. சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்டதும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.
தஞ்சை கரந்தையில் மிக பழமையான பெரியநாயகி சமேத வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை கருணாசாமி கோவில் என்று அழைக்கப்படும்.
கல்லணையை கட்டிய கரிகாலன் சோழனால் எழுப்பட்ட இந்த ஆலயம் கருங்குஷ்டம் நோயை போக்கியதாக தல வரலாறு கூறுகிறது.
இத்தகைய சிறப்புமிக்க ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 3 நாட்கள் சூரிய ஒளி சிவபெருமான் மீது விழும்.
அந்த நாளில் சூரிய பூஜை கோவிலில் நடைபெறும்..
அதன்படி இன்று வஷிஸ் டேஸ்வரருக்கு மஞ்சள், பால், சந்தனம், உள்ளிட்ட பலவகையான அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
பின்னர் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது பட்டதும் வஷிஸ்டேஸ்வரருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.