BREAKING NEWS

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

கல்லீரல் மாற்று இருதய அறுவை சிகிச்சை முதன் முதலாக சிவகாசி மதி மருத்துவமனையில் துவங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி. விஸ்வநத்தம் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையமும் MGM Healthcare நிறுவனமும் இணைந்து சிவகாசியில் அதி நவீன தரமான கல்லீரல் புற்றுநோய் மற்றும் இருதய சிகிச்சைகளை இணைந்து வழங்குவதற்கான மருத்துவ உடன்படிக்கையை கையெழுத்திடப்பட்டது.

 

அதன் மூலம் இனிவரும் காலங்களில் மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தில் MGM Healthcare நிறுவனத்தைச் சேர்ந்த சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பொதுமக்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்க மாதம் இருமுறை வருகை தர இருக்கிறார்கள்.

 

அதன் மூலம் சென்னையில் இருக்கின்ற மருத்துவ சேவைகள் சிவகாசியில் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்பதனை மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் தலைமை மருத்துவர் மருத்துவர்.கா.மகேந்திர சேகர் MD., அவர்கள் தெரிவித்தார்.

 

MGM Healthcare நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் மிஸ்டர் மருத்துவர் சிவராம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )