கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலம் வட்டம் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம் வடக்கு ஒன்றியம் சார்பில் ஏர்வாய் பட்டினம், கடத்தூர், தெ ங்கியாநத்தம், எளியத்தூர், பைத்தந்துறை, தென் செட்டியந்தல் தொட்டியம், நாக்குப்பம், கல்லாநத்தம் பாண்டியன் குப்பம்,உள்ளிட்ட கிராமங்களில் “மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகம்”நடைபெற்றது.
முகாமிற்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றிய குழு துணை தலைவர் அன்பு மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் வேலு, ஒன்றிய கவுன்சிலர் சீத் தாபமா, திவ்யபாரதி கொம்பையன்,நந்தினி மோகன்,உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதன் வரவேற்றார், இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 1800 கும் மேற்பட் மணுக்கள் வாங்கினார்
.மேலும் இந்த மனுக்கள் மீது துறைவாரியாக பிரித்து அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார் மேலும் 10 கிராமங்களில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு 8000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் கள்ளக்குறிச்சி வேளாண்துறை துணை இயக்குனர் சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேபி, ராமமூர்த்தி, லோகநாதன்,சண்முகம், முருகேசன், தனலட்சுமி அமுதா, கோகிலா, ஆசை முத்து, உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.