கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த வந்த டாஸ்மாக் உதவி மேலாளரை பொதுமக்கள் தாக்கி பாருக்குள் தள்ளி சிறை வைத்தனர்.
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் குப்புசாமி மற்றும் விவேக் இவர்கள் மீன் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர் தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் 81 23 டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது டாஸ்மாக் கடையை ஒட்டி அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் இன்று காலை டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்திற்கு முன்பாக பாரில் மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
Black pearl என்கிற பிராந்தியை குப்புசாமியும் விவேக்கும் வாங்கி அருந்தி உள்ளனர் அருந்திய சில நிமிடங்களில் இருவருக்கும் வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டிருக்கிறது இதில் குப்புசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் உயிருக்கு ஆபத்தான நிலையில் விவேக் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி விவேக்கும் உயிர் இழந்தார். இந்த சம்பவம் கேள்விப்பட்ட உடன் பார் உரிமையாளர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும் டாஸ்மாக் உதவி மேலாளரும் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் டாஸ்மாக் உதவி மேலாளர் தங்க.பிரபாகரனை தாக்கி பாருக்குள் தள்ளி சிறைபிடித்தனர்.. சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.