கழனி வாசல் ஊராட்சி மோசடி முறைகேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலைவர் கணவர் தலையீடு நடவடிக்கை எடுக்க கோரி பத்து ரூபாய் இயக்கத்தினர் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கழனிவாசல் ஊராட்சியில் சுமார் 45 லட்சங்களுக்கு மேல் நடைபெற்றுள்ள மோசடி முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் குமார் ஆத்துமீறி தலையிடுவதை நிறுத்திடவும்,
நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் பிற கோரிக்கைகளை வலியுறுத்தி பத்து ரூபாய் இயக்கத்தின்மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் காந்தராவ் ராசு தலைமையில் கவனயீர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட மாநகர ஒருங்கிணைப்பாளர் ஜோசப் அமல்ராஜ் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் எஸ்பி சிவகுமார்மாவட்ட இலக்கிய அணி செயலாளர் சித. அருள் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் கே கோடீஸ்வரன் மாவட்ட ஆலோசகர் ரா.கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநில பொதுச் செயலாளர் நல்வினை. விஸ்வராஜு மாநிலச் செயலாளர் கே சதீஷ்குமார் மாவட்ட சட்ட ஆலோசகர்கள் வி சிவா எஸ் விஜயராகவன் ஆகியோர் கோரிக்கை சிறப்புரையாற்றினார்கள்.
பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம் முகமது மாஹிர் முகமது அன்சாரி ராசி.மு.ராஜசேகர் ஆர் பிரபு பி மனோகரன் ஆர் இளங்கோவன் கே எஸ் வீர ராஜேந்திரன், பொறியாளர் சவரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.