BREAKING NEWS

கழிவுநீரை அகற்றித் தரக் கோரி பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

கழிவுநீரை அகற்றித் தரக் கோரி பொதுமக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

வேலூர் மாவட்டம், வேலூர் எஸ். மனோரமணி வயது 60, க/பெ. சுப்பிரமணி,NO.BE. 13, பகுதி 3, வள்ளலார், சத்துவாச்சாரி, வேலூர் 9, பகுதியைச் சேர்ந்த எங்கள் தெருவில் P.F. ஆபீஸ் வாசலில் பாதாள சாக்கடையில் இருந்து சுமார் ஒரு மாதமாக சாக்கடை கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறி எங்கள் வீட்டு வாசல் முன்பு குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவலை கூறினால் அங்கு பைப் மின் மோட்டார் கொண்டு வந்து அந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி விட்டுச் செல்கின்றனர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நின்று விடுகிறது.

அப்பகுதியில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை வாழ்ந்து வருகிறோம். இதனால் டெங்கு, மலேரியா, டைஃபாய்டு, சிக்கன்குனியா போன்ற கொடிய நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர்கள் இவ்வழியாகச் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஆகையால் அப்பகுதி மக்கள் மற்றும் வீதியில் உள்ளவர்கள் இது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக எழுதி அந்த சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்தி தரவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS