கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகரித்துள்ள கந்துவட்டி கொடுமையை கட்டுப்படுத்த வேண்டி தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி கழுத்தில் வங்கி காசோலைகளை தொங்கவிட்டபடி நூதன முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்க வந்ததால் திடீர் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் வசிப்பவர் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி இவர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, தினவட்டி ஆகிய முறைகளில் கந்துவட்டி வசூலித்து வருகின்றனர் இதனால்
விவசாயிகள் தொழிலாளர்கள், தின கூலிகள், தினசரி சந்தை வியாபாரிகள், மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே கந்துவட்டி தடை சட்டம் தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருந்தாலும் இதனை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
ஆகவே கந்து வட்டி தொடர்பாக பல மாற்றங்களை மேற்படி சட்டத்தில் செய்ய வேண்டும் கந்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், தாதா ஈசம் என குற்றப்பிரிவு பின்னணிகள் கொண்டவர்களாக உள்ளதால் இந்த தொழிலில் கொடி கட்டி பறக்கிறார்கள்.
கந்து வட்டி வழக்குகள் நீதிமன்றத்தில் காலதாமதம் ஆகாமல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து மூன்று மாதம் முதல் ஓராண்டிற்குள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்டம் தோறும் கந்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் கணக்கெடுப்பு செய்து கந்துவட்டி யை ஒழிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட வேண்டும்.
கந்துவட்டியால் பாதித்த நபர்கள் சொத்துக்களை ரவுடிகள் வைத்து மிரட்டி எழுதி வாங்குவது இன்றும் தொடர்கிறது கந்து வட்டி தொழில் செய்யும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் கந்து வட்டிக்கு பணம் வாங்க கூடாது அதனால் வரும் விளைவு உயிரே போய்விடும் என்றும் இது சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யலுசாமி தனது கழுத்தில் காசோலைகளை மாலையாக கோர்த்து தனது கழுத்தில் அணிந்த வண்ணம் மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.