BREAKING NEWS

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!

காங்கேயநல்லூர் பகுதியில் 24 மணி நேரமும் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்: கண்டுகொள்ளாத விருதம்பட்டு போலீசார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், காங்கேயநல்லூரில் ஆர்ச் அருகில் 24 மணி நேரமும் ஒரு வீட்டில் விபச்சாரம் கொடி கட்டி பறக்கிறது. இதை கண்டறிந்து விபச்சார கும்பலை கைது செய்ய வேண்டிய போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பதுடன், அவர்களிடமே மாமூல் வாங்குவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் தனியாக ஒரு வீடு எடுத்து அதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திருப்பதி, சித்தூர், குண்டூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விபச்சார அழகிகளை கொண்டு வந்து தொடர்ந்து 24 மணி நேரமும் இடைவிடாது விபச்சாரம் நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டும் புகாரும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த வீட்டில் தொடர்ந்து 24 மணி நேரமும் ரோமியோக்கள் வட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த வீட்டை வாடகை எடுத்து சண்முகவல்லி என்ற புரோக்கர் விபச்சார தொழிலை பெரிய அளவில் நடத்தி வருகிறார்.

இவருக்கு பக்கபலமாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் காவலர்களாக பணியாற்றும் சில கருப்பு ஆடுகள் உதவுவதாக அதிர்ச்சி தகவல்கள் பொதுமக்கள் தரப்பில் கதை கதையாக கூறப்படுகிறது.

இந்த விபச்சாரம் நடக்கும் வீட்டுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அவ்வப்போது கூத்தும் கும்மாளமுமாக இந்த வீட்டில் பொழுதை கழிக்கின்றனர் பல இளைஞர்கள். அவர்கள் மது அருந்துவது மற்றும் விபச்சார அழகிகளிடம் உல்லாசமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த பகுதியில் கஞ்சா புழக்கமும் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக காவல் துறையில் தனிப் பிரிவில் பணியாற்றுபவர்களும் காவல் துறையில் கடமையை செய்யாமல் வழி தவறி மாமூல் வாங்குவதை கற்றுக்கொண்டு, பணத்தை கல்லா கட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

20 நிமிடங்களுக்கு தலா ரூபாய் 2000ம், இரவு முழுவதும் தங்கி உல்லாசம் அனுபவிக்க தலா ஒரு நபருக்கு ரூபாய் 10,000 மும் கறந்து விடுவதாக இந்த விபச்சார விடுதியின் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருணையின் நிறம் காக்கி என்பதற்கு எதிராக நடக்கின்றனர் விருதம்பட்டு போலீசார் .பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீசார், காவல் காக்க வேண்டிய போலீசார் பொதுமக்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைத்துள்ளனர் என்றுதான் கூற வேண்டும்.

அந்த அளவிற்கு காவல் துறையினரின் கை ஓங்கி ஒலிக்கிறது என்றே சொல்லலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் நடக்கும் விபச்சார விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கேயநல்லூர் பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். பொது மக்களின் எண்ணம் ஈடேறுமா? அல்லது நிராசையாக ஆகுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS